கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 5 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 787 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 362 காளையர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 58 பேர் காயமடைந்தனர்.
2-ஆம் சுற்று நிறைவடையும் நிலையிலிருந்த போது, சோர்வின் காரணமாக தடுப்பு வேலி கம்பி ஓரமாக நின்றிருந்த பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞரை மாடு குத்தியதில் அவரது வலது கண் பார்வை பறிபோனது.
காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 450 பேர் காயமடைந்துள்ளனர்.
செல்வம்
12 ஆண்டுகளுக்குப் பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கம்!
சென்னைக்கு திரும்பும் மக்கள்: அணிவகுக்கும் வாகனங்கள்!