சென்னையில் இன்று (ஜனவரி 6) 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயின் சமூகத்தின் புனித தலம் சமத் ஷிகர்ஜி ஜார்கண்ட்டில் இருக்கிறது. இந்த புனித தலத்தை சுற்றுலா தளமாக மாற்ற ஜார்கண்ட் மாநில அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை கண்டிக்கும் விதமாக ஜெயின் சமூகத்தினர் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் சென்னையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் இன்று சிந்தாதிரிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.
செல்வம்
பேச்சுவார்த்தை நடத்த தயார்… ஆனால், உக்ரைனுக்கு புதின் விதித்த நிபந்தனை!
கிச்சன் கீர்த்தனா : சோயா சங்க்ஸ் (Chunks) பக்கோடா