Jail sentence for Rajesh Das

ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை: உறுதி செய்த நீதிமன்றம்!

தமிழகம்

Jail sentence for Rajesh Das

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸின் மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து 3 வருட சிறை தண்டனையை விழுப்புரம் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 12) உறுதி செய்துள்ளது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

பலமுறை வாதாட கால அவகாசம் அளித்தும் ராஜேஷ் தாஸ் தொடர்ந்து வாதாட மறுத்து வந்த நிலையில், நீதிமன்ற எச்சரிக்கைக்கு பின்னர் கடந்த 5ஆம் தேதி நேரில் ஆஜராகி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

அதன்பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கடந்த 9 ஆம் தேதி இறுதி வாதத்தை முன் வைத்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்தது.

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் தனது தீர்ப்பில்,

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் உறுதி செய்யப்படுகிறது என்றும்,

ராஜேஸ் தாஸ் மற்றும் முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் உத்தரவிட்டார்.

மேலும் இந்த உத்தரவினை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசமும் நீதிபதி  வழங்கி உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தேங்கி நிற்கும் தங்கம் விலை… வேகம் காட்டும் வெள்ளி விலை!

Jail sentence for Rajesh Das

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *