அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் சிறை உறுதி!

Published On:

| By christopher

அனுமதியின்றி பேனர் வைப்போர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 9) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. காதுகுத்து முதல் அரசியல் கட்சிகளின் கூட்டம் வரை என பல்வேறு நிகழ்வுகளுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் நிறுவப்படும் அதிகளவிலான பேனர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதனையடுத்து பேனர் வைப்பதற்கான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. எனினும் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர் கலாச்சாரம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது. அதேபோல் உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

விபத்திற்கு காரணமான பேனர், விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5000 அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

’மின் கட்டண உயர்வு எதிர்வினைகளை உருவாக்கும்’: ஈ.ஆர்.ஈஸ்வரன்

7வது உலக அழகி பட்டத்திற்கு குறிவைக்கும் இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel