அரசு மருத்துவர் பாலாஜியைக் கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது தனியார் மருத்துவர் ஜாக்குலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வரும் பாலாஜியை விக்னேஷ் என்பவர் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி கிண்டி மருத்துவமனையில் உள்ள அவரது அறையிலேயே கத்தியால் குத்தி விட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார்.
ஆனால், அவரை அங்கு பணிபுரியும் பாதுகாவலர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்த போலீஸார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், “நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு மருத்துவர் பாலாஜி அளவுக்கு அதிகமான மருந்துகள் கொடுத்ததால் தான் தன் தாய் வலியால் கஷ்டப்படுகிறார் என்று தனியார் மருத்துவர் ஜாக்குலின் மோசஸ் கூறினார்.
அதனால் தனக்கும் மருத்துவர் பாலாஜிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருத்துவரைக் கத்தியால் குத்திவிட்டேன்” என்று விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையில், மருத்துவர் பாலாஜிக்குக் கிண்டி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.
இந்த நிலையில் தான் மருத்துவர் ஜாக்குலின் மோசஸ் விக்னேஷ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் விக்னேஷின் தாயாருக்கு அரசு மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நான் கூறியதாக விக்னேஷ் தவறான கருத்தைப் பரப்பியுள்ளார்.
நுரையீரல் புற்றுநோய்க்காக விக்னேஷின் தாயார் பிரேமா மூன்று முறை தன்னிடம் சிகிச்சை எடுத்துள்ளார். மேலும், விக்னேஷிடம் அவரது தாய் பிரமாவைக் கிண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு நான் தான் கூறினேன்.
ஆனால், பிரேமாவும் அவரது மற்றொரு மகன் லோகேஷும் என் மீது அவதூறு பரப்பி வருவதால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வெண்டும், என ஜாக்குலின் மோசஸ் தான் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மைக் டைசன் அவுட்: ஒரு டிக்கெட் விலை 17 கோடி!
சமுத்திரகனி – தம்பி ராமையா நடிக்கும் ‘ ராஜா கிளி’! : ரிலீஸ் தேதி அறிவிப்பு
கங்குவா ஹீரோயின் திஷா பதானி தந்தைக்கு நடந்த சோகம்… இத்தனைக்கும் முன்னாள் டி.எஸ்.பியாம்!