கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் கபாப்

தமிழகம்

கோடையில் சிலருக்கு நிறைய தண்ணீர் குடித்தாலும் அடிக்கடி தாகம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் உணவில் அடிக்கடி பலாக்காயை சேர்த்துக் கொள்ளலாம். கண் பார்வை மங்குவது. மாலைக்கண், நிறக் குறைபாடு போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கும் உதவும் பலாக்காயில் கபாப் செய்து ருசிக்கலாம்.

என்ன தேவை?

பலாக்காய் – 200 கிராம் (தோல் சீவி பொடியாக நறுக்கவும்)
பனீர் – 50 கிராம்
பெரிய உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)
சோள மாவு (கார்ன்ஃப்ளார்) – 2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பிரெட்தூள் – அரை கப்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தனியாத்தூள் (மல்லித்தூள்), சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள் – தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
உடைத்த முந்திரி, உலர்திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பலாத்துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் தண்ணீரை வடிக்கவும். அந்தப் பாத்திரத்தில் வெந்த பலாத்துண்டுகளுடன் பனீர், மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், தனியாத்தூள் (மல்லித்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, இஞ்சி, உடைத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை விருப்பமான வடிவத்தில் செய்து வைக்கவும். இதுதான் கபாப்.

மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். செய்து வைத்துள்ள கபாப்களை மைதா மாவில் முக்கி எடுத்து பிரெட் தூளில் புரட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கபாப்களைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கொத்தமல்லிச் சட்னி, புளிச்சட்னி, சாஸ் உடன் பரிமாறவும்.

பலாக்காய் சிப்ஸ்

கேரள பலாப்பழ அல்வா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *