கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் சிப்ஸ்

பலாக்காயில் மற்ற காய்கறிகளைக் காட்டிலும் தாமிரச்சத்து அதிகம். மேலும் வைட்டமின் சி சத்தும் அதிக அளவில் இருக்கின்றன.  விடுமுறையில்   குழந்தைகள் வீட்டில் இருக்கும் இந்தக் கோடையில் அவர்களுக்கு பிடித்த, எளிதாகச் செய்யக்கூடிய இந்த பலாக்காய் சிப்ஸ் செய்து கொடுக்கலாம். இந்த சிப்ஸ் சிறந்த ஸ்நாக்ஸாக அமையும்.

என்ன தேவை?

முற்றிய பலாக்காய்  – ஒன்று
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பலாக்காயின் தோலைச் சீவி, நடுவில் உள்ள தண்டை எடுத்துவிட்டு பால் போக கழுவி விரல்நீள  துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து, பலாக்காய்த் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக இருக்கும்போது உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து, வாரக்கணக்கில் வைத்து சுவைக்கலாம்.

கேரள பலாப்பழ அல்வா

தோசைக்குத் தனியாக மாவு அரைக்க வேண்டுமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts