It's going to rain! - Good news from the Meteorological Department!

மழை வர போகுதே – வானிலை மையம் கூல் அப்டேட்!

தமிழகம்

ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று (மே 30) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

“ தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 30) முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிலும் குறிப்பாக, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்ந்து, ஜூன் 3ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், தமிழகத்தின் இதர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சற்று குறைந்து, இயல்பை ஒட்டியும் அல்லது இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானிலை முன்னறிவிப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று (மே 30) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

தென் வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்றும், நாளையும் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி: ஐசியூவாக மாறிய அரசு பேருந்து!

அதர்வாவின் புதிய படம்… மீண்டும் நடிகராக களமிறங்கும் தமன்..?

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *