தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 20) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர்களை குறிவைத்து சென்னை உட்பட தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக 4 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, எண்ணூர், நாவலூர், நீலாங்கரை, ஓஎம்ஆர் என பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்னேரியில் உள்ள ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் இயக்குநர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையங்களுக்கு மின் உபகரண பொருட்களை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் சப்ளை செய்து வருகிறது.
தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காசியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மோனிஷா
புதின் – கிம் சந்திப்பு: அதிர்ச்சியில் அமெரிக்கா?
இலக்கை நோக்கி அதிகரித்துவரும் வரி வசூல்!