பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்தில் 4வது நாளாக ரெய்டு!

தமிழகம்

விழுப்புரத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில் 4வது நாளாக இன்று (நவம்பர் 5) வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகை காலங்களில் வரி ஏய்ப்பு செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் கடலூரில் உள்ள கேவி டெக்ஸ், கன்னிகா பரமேஸ்வரி, மகாலட்சுமி குரூப், மேக்னா குரூப் ஆகிய டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது.

அந்த வரிசையில் விழுப்புரத்தில் உள்ள எம்.எல்.எஸ் வணிக வளாக நிறுவனத்திலும் சோதனை நடத்தினர்.

கடந்த 3 நாட்கள் எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த சோதனை இன்றும் தொடர்ந்து 4வது நாளாகத் தொடர்கிறது.

எம்.எல்.எஸ் குழுமத்திற்குச் சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகத்தில் அடங்கியுள்ள மூன்று திரையரங்குகள், மகாலட்சுமி கல்வி நிறுவனம், மகாலட்சுமி ஜவுளிக் கடை, எம்.எல்.எஸ் மளிகைக் கடை, இருசக்கர வாகன ஷோரூம், நகைக்கடை, மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் 40க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தீபாவளி காலத்தில் அதிக விற்பனை செய்யப்பட்டு அவற்றைக் கணக்கில் காட்டாமல் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் வரி ஏய்ப்பு உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சோதனையில் கண்டறிப்பட்ட விவரங்கள் குறித்து தற்போது வரை வெளியாகவில்லை.

மோனிஷா

வேலைவாய்ப்பு : வனத்துறையில் பணி!

விஜய்க்கு வில்லன்: விஷால் போட்ட சம்பள கணக்கு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *