“காவல்துறையில் நேர்மையாக இருப்பது எளிதல்ல”– டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு!

தமிழகம்

காவல்துறையில் எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கும் மற்றும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் மற்றும் சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆகியோர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றனர்.

அவர்களின் பிரிவு உபச்சார விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறையில் எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது எளிதான விஷயம் அல்ல என்றார்.

டிஜிபிக்கள் சுனில் குமார் சிங்கும், ஷகில் அக்தரும் நேர்மையான அதிகாரிகளாக பணியாற்றினார்கள் என்றும் ஷகில் அக்தர் காவல் துறையில் எப்போதும் முக்கியமான பொறுப்புகளை கையில் வைத்திருந்தவர் என்றும் கூறினார்.

பல முக்கிய வழக்குகளை திறமையாக கையாண்டவர் ஷகீல் அக்தர் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தமிழக காவல் துறையில் மொத்தம் 15 டிஜிபிக்கள் உள்ளனர். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி கந்தசாமி,

காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி., ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், ஆபாஷ் குமார், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி,

சைபர் கிரைம் டிஜிபி அம்ரேஸ் புஜாரி, தீயணைப்பு துறை டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, என 15 டிஜிபிக்கள் உள்ளனர்.

இதில் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். இதில் சுனில்குமார் சிங்குக்கு பதிலாக அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கலை.ரா

தமிழகத்தின் வழியில் குஜராத்: மோர்பி செல்லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு!

தொடர் மழை: வடிந்தும் வடியாத சென்னை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *