சென்னை துரைப்பாக்கத்தில் மென்பொருள் நிறுவன பணியாளர் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த போரூரை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர், வயது 48. துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணிக்கு வந்தார்.
இந்த நிலையில் திடீரென ஏழாவது மாடியில் (நிறுவனத்தின் பின்புறம்) இருந்து குதித்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார். சத்தம் கேட்டு அங்கு சென்ற காவலாளி, இதுதொடர்பாக மென்பொருள் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷியாம் சுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய முதற்ட்ட விசாரணையில், 48 வயதான ஷியாம் சுந்தர், மென்பொருள் நிறுவனத்தில் இளைஞர்களுக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய முடியாத விரக்தியில் இருந்துள்ளார்.
இது மட்டுமன்றி வங்கியில் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதையும் சரிவர செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால்தான் மனவிரக்தி அடைந்து அவர் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கடன் சுமையா? பணிச்சுமையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
கலை.ரா
ஆன்லைனில் ஆர்டர்: பிரியாணி சாப்பிட்ட பெண் பலி!
“அம்மா என்ன கூட்டிட்டு போ” – திரும்பி வந்த தாய் யானைகள்!