ஈஷாவில் இலவச யோகா வகுப்பு!

Published On:

| By Kavi

சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படும் நிலையில், இந்தியா முழுவதும் ‘உங்களை தேடி யோகா’ என்ற திட்டத்தை ஈஷா யோகா மையம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ இலவசமாக யோகா கற்றுக்கொள்ள முடியும்.

பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்தபட்சம் 15 பேர் ஒன்றிணைந்தால் ஈஷாவின் யோகா பயிற்றுநர்கள் நேரில் வந்து யோகா கற்றுக்கொடுப்பார்கள். இந்த வகுப்பில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி, ஈஷா கிரியா போன்ற மிகவும் எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த யோக பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும்.

இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுகுதண்டும் நரம்பு மண்டலமும் வலுபெறும், மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உங்கள் இருப்பிடத்தில் யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள் Isha.co/idysessionrequest என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawbinars என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈஷா யோகா மையம் அறிவித்துள்ளது.

ராஜ்

கவர்னரை நீக்க கையெழுத்து இயக்கம்: நல்லக்கண்ணு முதல் கையெழுத்து!

கிச்சன் கீர்த்தனா: பட்டாணி – அவல் உப்புமா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share