வெள்ள நிவாரணப் பணி: மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா!

Published On:

| By Monisha

Isha Foundation medical team in Chennai

புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது.

இதற்காக கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து ‘ஈஷா அவுட்ரீச்’ சார்பில் நடமாடும் மருத்துவ வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் சென்னை வந்துள்ளனர்.

இவர்கள் மூன்று மருத்துவக் குழுக்களாக இயங்கி, வட மற்றும் தென் சென்னையின் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இது தவிர மூன்று நடமாடும் மருத்துவ வாகனங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதில் நிலவேம்பு குடிநீர் தினமும் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஈஷா யோக மையம் இதற்கு முன்பு 2004 –ல் ஏற்பட்ட சுனாமி, 2015 -ம் ஆண்டு சென்னை வெள்ளம், கஜா புயல் மற்றும் 2020 –ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பிற நிவாரண உதவிகளை பெருமளவில் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ‘எவர்கிரீன் இளமை’ சாத்தியமா?

சண்டே ஸ்பெஷல்: நீரிழிவாளர்களுக்கு பச்சரிசிக்கு பதில் புழுங்கலரிசிதான் நல்லதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel