2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்ற, 1 ஏப்ரல் 2024 அன்று 18 வயதை அடைந்திருக்க வேண்டும்.
இந்நிலையில் பொதுமக்கள் ஓட்டு போட வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்வது அவசியம்.
இதை ஆன்லைன் மூலமாக எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பெயரை சரி பார்ப்பது எப்படி?
https://www.eci.gov.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
இந்த பக்கத்தை ஸ்க்ரால் செய்து கீழே வந்தால் இடதுபுறத்தில் Electors என்ற பகுதியின் கீழ் 4ஆவது ஆப்ஷனாக search name in voter list இருக்கும்.
இதை கிளிக் செய்தால் EPIC தகவல் கேட்கும். அதில், வாக்காளர் அடையாள எண்ணை (EPIC Number) பதிவிட்டு, எந்த மாநிலம் என்பதை பதிவிடவும்.
அதன் கீழே இருக்கும் கேப்ட்சாவை பதிவிட்டு, சர்ச் பட்டனை தட்டினால், உங்களது பெயர், எந்த தொகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஸ்க்ரீனில் தோன்றும்.
EPIC Number இல்லை என்றால் உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் மற்றும் மொபைல் எண் வாயிலாகவும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தனிப்பட்ட விவரங்களை பதிவிடும் போது பிறந்த தேதி, மாவட்டம், சட்டமன்றம் மற்றும் உறவினரின் பெயர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
மொபைல் எண்ணை குறிப்பிடும் போது, உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும், அந்த ஓடிபியை பதிவிட்டால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளாம்.
வாக்காளர்கள் EPIC எண்ணைப் பயன்படுத்தி தங்கள் வாக்காளர் ஐடியின் டிஜிட்டல் பதிப்பையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அது எப்படி செய்வது?
https://www.eci.gov.in/ இணையதளத்துக்குள் சென்று Electors ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் மூன்றாவதாக உள்ள Download Voter ID (E-EPIC) என்பதை க்ளிக் செய்யவும்.
புதிதாக ஓபனாகும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
உள்நுழைந்ததும் மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ இட வேண்டும்.
அங்கு உங்கள் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
வாக்காளர் அட்டை இல்லை என்றால் என்ன செய்வது?
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளது, ஆனால் வாக்காளர் அட்டை இல்லை என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பிற அடையாள அட்டைகளை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.
அவை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை
புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் அலுவலக பாஸ்புக்
தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
ஓட்டுனர் உரிமம்
ஆதார் அட்டை
பான் கார்டு
RGI (Registrar General of India) வழங்கிய ஸ்மார்ட் கார்டு
பாஸ்போர்ட்
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.
இவற்றை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
GOAT அப்டேட்: மங்காத்தா செண்டிமென்டுடன் ‘களமிறங்கும்’ வெங்கட் பிரபு
IPL 2024: நல்லா வாழ்ந்தவன் ‘கெட்டு’ போகக்கூடாது… தெறிக்கும் மீம்ஸ்கள்!