கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சமையலில் வெங்காயத்தைத் தவிர்ப்பவரா நீங்கள்?

Published On:

| By Selvam

பெரும்பாலான வீடுகளில் சமையலுக்குத் தேவையான காய்கறிகள் இருக்கிறதோ, இல்லையோ… வெங்காயம் அவசியம் இருக்க வேண்டும்.

ஆனால், வெங்காய விலை உயர்வு பற்றிய நாடாளுமன்ற நடந்த விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை, எங்கள் வீட்டில் நாங்கள் அவ்வளவாக வெங்காயத்தைப் பயன்படுத்த மாட்டோம்’ என்று பதிலளித்தார். இந்த நிலையில்  சமையலில் வெங்காயம்… அவசியம் தானா?

“வெங்காயம் குறைந்த கலோரி உணவுப் பொருள். காய்கறிகளோடு சேர்த்துச் சாப்பிடும்போது, அதன் சக்தி மேலும் அதிகரிக்கிறது.

இப்போதெல்லாம் வெங்காயத்துக்குப் பதிலாக, முட்டைகோஸைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்யும்போது சுவையைச் சரிப்படுத்த முடியுமே தவிர, வெங்காயத்தின் பிரத்யேக ஊட்டச்சத்து உணவில் சேராமல் போகும். என்ன உணவாக இருந்தாலும், சிறிதளவு வெங்காயம் சேர்த்தால் மட்டுமே அதன் சக்தி உடலைச் சென்றடையும்.

100 கிராம் சின்ன வெங்காயத்தில் புரதச்சத்து – 1.8 கிராம், நார்ச்சத்து – 1.2 கிராம், கார்போஹைட்ரேட் – 11.5, எனர்ஜி – 57 கிலோ கலோரிகள் உள்ளன.

பெரிய வெங்காயத்தில் புரதச்சத்து – 1.5 கிராம், நார்ச்சத்து – 2.5 கிராம், கார்போஹைட்ரேட் – 9.5 கிராம், எனர்ஜி – 48 கிலோ கலோரிகள் உள்ளன.

மேலும், வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நச்சுகளை அழிக்க உதவுகிறது. சமைக்காத வெங்காயத்தைச் சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும். இதில் வலிமை தரும் மினரல்ஸும் ஏராளமாக இருக்கின்றன.

சர்க்கரை நோய், இதயப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும்கூட தாராளமாகச் சாப்பிடலாம். Is onion necessary in cooking?

சிறுநீரகக் கோளாறு, அல்சரால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். Is onion necessary in cooking?

இதுபோன்ற சில உடல்நலக் காரணங்கள் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து வெங்காயத்தைச் சமையலில் குறைத்துக்கொள்ளலாம். ஆனால், தவிர்க்கக் கூடாது.

முக்கியமாக கோடைக்காலத்தில், சிறிய வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது” என்கிறார்கள் டயட்டீஷியன்ஸ்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share