நம்மில் பலர் இனிப்பு பண்டங்களையும் காபி, டீ, ஜூஸ் போன்றவற்றில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது என்று ஒதுக்குவார்கள். மேலும் சிலர் இந்த பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது… வேண்டாம் என்று மறுப்பார்கள். இது நல்லதா? இது ஆரோக்கியமானதா?
“நம் உடலில் இனிப்புச்சத்து என தனியே ஒன்று கிடையாது. நம் உடலானது முழுமையாக ஆயில் போடப்பட்ட மெஷின் போன்றது. மாவுச்சத்துள்ள உணவுகள் உடலுக்கு என்ன செய்யும், புரதச்சத்துள்ள உணவுகள் என்ன செய்யும், கொழுப்புச்சத்துள்ள உணவுகள் என்ன செய்யும் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட வேலைகள் உள்ளன.
நாம் எந்த உணவைச் சாப்பிட்டாலும் அது செரிமானமாகி, கடைசியில் குளுக்கோஸாகவே மாறும். குளுக்கோஸ் இல்லாமல் மூளையால் இயங்கவே முடியாது. அதற்காக வெறும் குளுக்கோஸை வாயில் மென்றுகொண்டே இருந்தால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதே மாதிரிதான் இனிப்புச்சத்தும். இனிப்பாகச் சாப்பிட்டால்தான் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும் என்று எதுவும் கிடையாது.
கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது அரிசி, கோதுமை உணவுகளில், சிறுதானியங்களில், கிழங்கில் இருக்கிறது. கார்போஹைட்ரேட் என்பது எனர்ஜி கொடுக்கும் எரிபொருள் போன்றது. புரதச்சத்தானது திசுக்களைப் பழுதுபார்க்கும். தசைகளின் கட்டுமானத்துக்கும் செல்கள் பெருகவும் உதவும். எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றில் உள்ள கொழுப்புச்சத்து ஆற்றல் செறிவூட்டப்பட்ட ஆதாரம் போன்றது.
நம்முடைய உடல் என்பது ஒரு பரிசோதனைக்கூடம் போன்றது. அதிக அளவு கார்போஹைட்ரேட் சாப்பிடும்போது அது கொழுப்பாக மாறி நம் இடுப்பிலோ, தொப்பையிலோ சேர்ந்துவிடும். உடலுக்கு எனர்ஜி வேண்டும் என்ற எண்ணத்தில் கார்போஹைட்ரேட்டே எடுத்துக்கொள்ளாமல் அதிக அளவு புரதமாக எடுத்துக்கொள்ளும்போது, உடலானது புரதச்சத்தையே ஆற்றலுக்குப் பயன்படுத்திக்கொள்ளும்.
சர்க்கரையே இல்லாமல் சாப்பிடுவதில் எந்தத் தவறுமே இல்லை. ஏற்கெனவே சொன்னதுபோல நாம் என்ன சாப்பிட்டாலும் அது இறுதியில் குளுக்கோஸாகத்தான் மாறப் போகிறது. உடலுக்கு என்ன சத்து தேவை என்பது சரியாகத் தெரியும்.
எனவே நம் வயது, எடை, உடல் உழைப்புக்கேற்ப அளவாக கார்போஹைட்ரேட், பழங்கள், சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டியதுதான் அவசியம். பாக்கெட் உணவுகளைச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்… அதில் Added Sugar, Total Sugar என இரண்டு இருக்கும். இதில் Added Sugar துளியும் இல்லை என்று தெரிந்தால்தான் அதைச் சாப்பிட வேண்டும். சில உணவுகளில் இயற்கையாகவே சர்க்கரைச் சத்து இருக்கும். இதே விதி உப்புக்கும் பொருந்தும்.
எனவே சர்க்கரையே இல்லாமல் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. நம் உணவில் இயற்கையாகவே உள்ள சர்க்கரைச் சத்தே உடலுக்குப் போதுமானது” என்கிறார்கள் டயட்டீஷியன்ஸ்.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
‘ஹனு-மேன்’ படத்தின் ‘ஹனுமான் சாலிசா’ பாடல் வெளியீடு