நளினி இன்று விடுதலை ஆவாரா?

Published On:

| By christopher

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்காததால் நளினி உட்பட 6பேரின் விடுதலை தாமதம் ஆகலாம் என்று தமிழக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரில் பேரறிவாளன் மட்டுமே ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டார்.

அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட எஞ்சியுள்ள 6பேரையும் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது.

அவர்கள் அளித்த தீர்ப்பில், ‘‘கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10மாதங்களாக பரோலில் உள்ள நளினி, இன்று வேலூர் சிறைக்குத் திரும்பி, விடுதலைக்கான ஆணையுடன் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நளினி விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

நகல் கிடைத்தால் தான் வேலூர் சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை முறைப்படி விடுவிக்க முடியும்.” என்று வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல் தெரிவித்துள்ளார்.

அதேபோல், புழல்சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் இதே சூழ்நிலையில் உள்ளதாக அங்குள்ள சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நளினி உட்பட 6பேரும் சிறைவாசத்தில் இருந்து முறைப்படி வெளியே வருவதில் தாமதம் ஏற்படலாம்.

நீதிமன்ற உத்தரவு நகல் இன்று கிடைக்காத பட்சத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமையே விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

வேலைவாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி!

கிரிக்கெட் லைவ் ஸ்டீரிமிங்: களமிறங்கும் அமேசான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel