aavin job

ஆவினில் முறைகேடாக பணி: 236 பேர் அதிரடி நீக்கம்!

தமிழகம்

ஆவினில் அதிமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆவினில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மேலாளர், உதவி பொது மேலாளர், எஸ்.எப்.ஏ., உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட்டன. எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் இதில் தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியது. நேரடியாக பணி வழங்கியது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தாக புகார் எழுந்தது.

இதன் பேரில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அ.தி.மு.க ஆட்சியில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக நேரடியாக 236 ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

ஓராண்டு விசாரணைக்குப் பிறகு ஆவின் நிர்வாகம் கடந்த திங்கள்கிழமை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்ய காரணமாக இருந்த தேர்வுக் குழு மீதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலை.ரா

போலியோ 3 ஆவது தவணை சொட்டு மருந்து!

நயன்தாராவின் தங்கமனசு: நெகிழ்ந்த குழந்தைகள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *