ஹெல்த் இன்சூரன்ஸ்… முதியவர்களுக்கு குட் நியூஸ்!

Published On:

| By Selvam

மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ)  நீக்கியுள்ளது.

இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதாவது 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது. இந்தநிலையில், மூத்த குடிமக்களின் நலன் கருதி ஐஆர்டிஏஐ வயது வரம்பை தளர்த்தியுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 முதல் 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்.

ஐஆர்டிஏஐ என்பது இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான காப்பீட்டுத்துறையை நிர்வகிப்பதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்குமான ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.

ஐஆர்டிஏஐ-யின் இந்த அறிவிப்பானது மூத்த குடிமக்களுக்கான மருத்துவ பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் ஹெல்த்கேர் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் சவுத்ரி, “இன்சூரன்ஸ் கவரேஜ் மீதான வயதுக்கட்டுப்பாட்டை நீக்குவதற்கான முடிவு மூத்த குடிமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். மேலும், மூத்த குடிமக்களின் நீண்ட ஆயுள் நலனை மேம்படுத்தும்

முன்னதாக 65 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் மட்டுமே காப்பீடு பெற தகுதியுடையவர்களாக இருந்தனர். ஆனால், மூத்த குடிமக்களுக்கு தான் பெரும்பாலும், ஹெல்த் இன்சூரன்ஸ் தேவைப்படும். அவர்களுக்கு அது கிடைக்காமல் இருந்தது.

இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் மூலம் முதியவர்கள் காப்பீட்டு பலனை பெறலாம். இது அவர்களது ஆரோக்கியமான வாழ்வை உறுதிசெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நிறம் மாறும் உலகில் ஃபர்ஸ்ட் லுக்: ஸ்பெஷல் என்ன?

மீண்டும் தேர்தல் பத்திரமா? – நிர்மலா சீதாராமனை சாடிய மனோ தங்கராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel