அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களைப் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று செய்தித்துறை அலுவலர்களை தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார்.
மாணவா்களின் திறன்களை சோதிப்பதற்காக நடத்தப்படும் தோ்வு, போட்டித் தேர்வு. இதில் போட்டியாளர்களில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மற்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.
போட்டித்தேர்வுகள் பெரும்பாலும் பல்கலைக்கழகம், கல்லூரி சேர்க்கை அல்லது மேல்நிலைப் பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வு போன்றவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் பொதுத் துறைகளில் தேவைப்படும் பதவிகள், இந்திய ஆட்சிப் பணி போன்ற தேர்வுகள் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான பல பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் வழியாக அப்பணிகள் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில் காமராஜர் நினைவு இல்லம், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம்,
திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை,
போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றியடைய பாடுபடும் மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் செய்தித்துறை அலுவலர்களை தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் எனது நண்பர்கள்: அண்ணாமலை
“கடினமான தேர்வு” : கர்நாடகாவின் அடுத்த முதல்வர் – எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!