33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Selvam

ips officers 33 transfer

தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி வருண் குமார் திருச்சி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.நகர் உதவி ஆணையராக இருந்த அருண் கபிலன் சேலம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா மயிலாடுதுறை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை வடக்கு காவல் துணை ஆணையராக இருந்த அரவிந்த் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி பொன் கார்த்திக் குமார் அடையாறு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் எஸ்.பி சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை எஸ்பியாக இருந்த நிஷா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தாம்பரம் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் அதிவீர பாண்டியன் நாகை கடலோர பாதுகாப்பு படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையராக மகேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடையாறு உதவி ஆணையர் மகேந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்பு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி எஸ்பியாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சட்டம் ஒழுங்கு ஏஐஜி உமா சென்னை காவல்துறை தலைமையக ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி அங்கித் ஜெயின் தி.நகர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை எஸ்.பி செல்வராஜ், வண்டலூர் போலீஸ் அகாடமி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் ஆகாடமி துணை ஆணையர் தீபா சத்யன் பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செல்வம்

வெங்காயத்தின் விலையும் விரைவில் உயரும்!

கிச்சன் கீர்த்தனா: அடிக்கடி 750 மில்லி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share