இந்திய போஸ்ட் ஆபிஸ்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களின் நன்மை பற்றி பலரும் அறியாமல் இருப்பதுதான் சோகம். அதில், ஒரு திட்டத்தில் தினமும் 50 ரூபாய் செலுத்தி வந்தால் திட்டம் முடிவடையும் போது 35 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
கிராம சுரக்ஷா யோஜனா என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி தினமும் 50 ரூபாய் செலுத்த வேண்டும். மாதம், 3 மாதம், 6 மாதம் வருடம் என மொத்தமாகவும் கட்டலாம். வருடத்துக்கு ரூ.18,250 செலுத்த வேண்டியது இருக்கும். இப்படி , 20 ஆண்டுகள் கட்டி வந்தால் திட்டம் நிறைவடையும் போது 30 முதல் 35 லட்சம் ரூபாய் கிடைக்கும்.10 வருடம், 15 வருடம், 20 வருடங்கள் என இந்த திட்டம் உள்ளது. அப்படியென்றால், 20 வருடத்துக்கு 6 லட்சத்து 48 ஆயிரம் கட்டியிருப்பீர்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
19 வயது முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி படைத்தவர்கள்.இந்த திட்டத்தில் சேருபவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கிராமப்புறத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு பணியில் இருக்க கூடாது. வங்கிக்கணக்கு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
வருமான சான்றிதழ், அடையாள அட்டை, அட்ரஸ் சான்று, வங்கி கணக்கு விவரம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வயது சான்று ஆகியவை தேவை. அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸ் வென்று விண்ணப்பங்களை நிரப்பி கொடுத்து சேர்ந்து கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்