சென்னை மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 13) முதல் முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சர்வதேச பட்டம் விடும் விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 13) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த விழா சென்னையிலிருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அருகில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் சிறு குறு மற்றும் குறுந்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 6 அணிகள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து 4 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த விழா பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு பிறகு உணவு கடைகள், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான திறமை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இதனை மக்கள் கண்டுகளிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் திருவள்ளுவர் வடிவில் பட்டத்தை பறக்கவிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சமீபத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் முதல் முறையாக நடைபெற்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது, பட்டம் விடும் விழாவும் முதல் முறையாக நடத்தப்படுவதால் மாமல்லபுரம் மீண்டும் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெறலாம்.
மோனிஷா
நாமெல்லாம் ஒரே குடும்பத்தினர் : காமன்வெல்த் வீரர்களிடம் மோடி