ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு!

தமிழகம்

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 160 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருவண்ணாமலை சரகத்தில் 88 சங்கங்களும், செய்யாறு சரகத்தில் 71 சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன.

 

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 37 கிளைகளுடனும், 4 நகர கூட்டுறவு வங்கிகளும், 8 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு ஓராண்டு வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், தாட்கோ, டாப்செட்கோ, டாம்கோ கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நடப்பு 2023-24 நிதியாண்டுக்கு பயிர் கடன் வழங்க ரூ.1000 கோடியும், கால்நடை பராமரிப்பு சார்ந்த மூலதனக்கடன் வழங்க ரூ.205 கோடி வட்டியில்லாமலும், நகைக்கடன் ரூ.876 கோடியும், சுய உதவிக்குழுக்கடன் வழங்க ரூ.202 கோடியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்க ரூ.4 கோடியும், மத்திய கால முதலீட்டு கடன் வழங்க ரூ.25 கோடியும், இதர கடன்கள் வழங்க ரூ.38.8 கோடியும் குறைந்த வட்டியில் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கடனுதவிகளை அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், கூட்டுறவு நிறுவனங்களை அணுகி பயன்பெறலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுபவரா நீங்கள்?

வேலைவாய்ப்பு : ஐ.ஏ.ஏ.டி- யில் பணி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *