அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று பயணத்தை மேற்கொள்ளலாம் என்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார். தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகிறது. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து பின்னர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று பயணம் செய்து வருகின்றனர்.
எனவே பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், “பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு, 31-12-2023 முதல் முன்பதிவு செய்த / செய்யாத பயணிகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு செய்தோர் / பயணம் செய்ய விரும்புவோர் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிறக்கும் ஆங்கில புத்தாண்டு : வாழ்த்தும் அரசியல் தலைவர்கள்!
சுற்றுலா வேன் மீது மோதிய லாரி: ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!