இரண்டு ஐஜிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜனவரி 31) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் ,தமிழ்நாடு காவல் துறை மதுரை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் சென்னை தென்மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், மதுரை வடக்கு மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 27 ஆம் தேதி 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஜனவரி 28 ஆம் தேதி 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டார்.
இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2 ஐஜிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பெண் நிர்வாகி மீது தாக்குதல்: அமர்பிரசாத் ரெட்டி முன் ஜாமீன் மனு!