பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

தமிழகம்

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுநல மனு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தகவல் வழங்க மறுப்பு

அந்த மனுவில், உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது என்று குறிப்பிட்டு இருந்தார். தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன?, எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்? என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்கக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாகவும், இந்த தகவல்கள் எனக்கு வழங்கப்படவில்லை என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு உத்தரவு

இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 8) தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு விசாரித்தது. அப்போது தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்  விசாரணையை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைத்தனர்.

கலை.ரா

ஆசை நாயகிக்கு கொடுக்க 550 சவரனை திருடிய நபர் : சொந்த வீட்டிலேயே கைவரிசை – சிக்கியது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *