கிச்சன் கீர்த்தனா: கார மஃபின்ஸ்

தமிழகம்

சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃபிரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். அந்த வகையில் மஃபின்ஸும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் வீட்டிலேயே இந்த கார மஃபின்ஸ் செய்து கொடுக்கலாம்.

என்ன தேவை?  
உருளைக்கிழங்கு – 4 (வேகவைத்து, தோல் நீக்கி, மசிக்கவும்)  
கெட்டித் தயிர் – 3 டேபிள்ஸ்பூன் (துணியில் கட்டித் தொங்கவிட்டு நீரை வடிக்கவும்)
பால் – அரை கப்  
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டீஸ்பூன்  
மைதா மாவு – முக்கால் கப்  
துருவிய சீஸ் – 3 டேபிள்ஸ்பூன்  
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு டீஸ்பூன் 
மிளகு (கொரகொரப்பாக பொடித்தது) – அரை டீஸ்பூன்  
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்  
உப்பு – தேவையான அளவு  

எப்படிச் செய்வது?
மைதாவைச் சலித்து, உப்பு, எண்ணெய் சேர்த்து ரவை மாதிரி கலக்க வேண்டும் (இது பிரெட் தூள் போல் இருக்க வேண்டும்). மீதம் உள்ள எல்லாவற்றையும் இதனுடன் சேர்த்து, கெட்டியாகக் கலக்கவும் (உப்புமா பதம் மாதிரி இருக்கும்). இந்தக் கலவையை மப்ஃபின்ஸ் (Muffins) கப்களில் அல்லது `பேக்’ செய்யும் சிறு சிறு கப்களில் ஊற்றி சூடான `அவனில்’ பேக் செய்யவும் (180 டிகிரி செல்சியஸில், 25 நிமிடங்களுக்கு அல்லது வேகும் வரை) இந்த மஃபின்ஸ் டீ டைம் ஸ்நாக்ஸாகச் சாப்பிட ஏற்றது.

குறிப்பு: விருப்பமான சீஸ் சேர்க்கலாம். சீஸில் உப்பு இருப்பதால், உப்பைப் பார்த்துச் சேர்க்கவும்.

உருளைக்கிழங்கு சீஸ் சேவு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.