இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: ராமதாஸ் கண்டனம்!

தமிழகம்

இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது இன்று(அக்டோபர் 21) நடத்திய தாக்குதலுக்கு பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் இன்று அதிகாலை(அக்டோபர் 21) ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மீனவரை இந்திய கடற்படை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்த செய்தியை நம் மின்னம்பலத்தில் ’மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!’ என்கிற தலைப்பில் இன்று(அக்டோபர் 21) காலை செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்திய கடற்படையினர் நடத்திய இந்த தாக்குதலுக்கு பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், இன்று(அக்டோபர் 21) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

”கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீண்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது. மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது.

கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர்.

அதனால் ஏதேனும் ரோந்துப் படகு வந்தாலே அவர்கள் அச்சத்தில் படகை விரைவாகச் செலுத்தும் நிலைதான் உள்ளது. இதை புரிந்து கடற்படையினர் செயல்பட்டிருக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

ராமஜெயம் கொலை: 20 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

அரசியலிலிருந்து மருது அழகுராஜ் விலகல்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *