சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்!

தமிழகம்

சமூக வலைதளங்களில் சர்சைக்குரிய வகையில் மருத்துவக்குறிப்புகள் அளித்த சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சித்த மருத்துவர் ஷர்மிகா தனது யூடியுப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோக்களில், ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் உடல் எடை குறையும், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, இயற்கையும் கடவுளும் ஆசிர்வதித்தால் மட்டுமே கர்ப்பம் தரிக்க முடியும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்று பேசியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கள் சமூகவலைதளங்களில் சர்சையானது. பலரும் அவரது கருத்துக்கு எதிராக தங்களது சமூக வலைதளங்களில் எழுதி வந்தனர்.

இதனால் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில், இணையத்தில் அவர் வெளியிட்டு இருந்த சில வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செல்வம்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

மில்லெட் ஸ்வீட் பொங்கல்

என் வெற்றிக்கு காரணம் இது தான் : அக்சர் படேல் சொன்ன சீக்ரெட்!

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.