பீட்சா, பர்கர், ஃப்ரைடு ரைஸ் என்றால் விரும்பி சாப்பிடுபவர்கள்… ஹெர்பல் என்றால் நமக்கு வேண்டாத பொருள் என்று நினைக்கிற காலம் இது. இந்த நிலையில் உடலுக்கு முழு சத்தையும் அளிக்கும் இந்த ஹெர்பல் சாட் செய்து வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாறுங்கள். இனி துரித உணவுகளை ஒதுக்குவார்கள்.
என்ன தேவை?
முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய மாங்காய் – கால் கப்
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – அரை கப்
மாதுளை முத்துகள் – அரை கப்
புளி சட்னி, க்ரீன் சட்னி – தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை – தலா கைப்பிடி அளவு
சர்க்கரை – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
துளசி இலைகள் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்)
கற்பூரவல்லி இலை – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்)
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் முளைகட்டிய பச்சைப் பயறு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய், வெள்ளரிக்காய், மாதுளை முத்துகள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சாட் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, சர்க்கரை துளசி இலை, கற்பூரவல்லி இலை சேர்த்துக் கலக்கவும். இதன் மேலே க்ரீன் சட்னி, புளி சட்னியைப் பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.
பச்சைப் பயறை உதிர் உதிராக வேகவைத்தும் சேர்க்கலாம். மேலே ஓமப்பொடி தூவியும் பரிமாறலாம்.
சிறிதளவு புளியுடன் வெல்லம், உப்பு, பேரீச்சம்பழம் சேர்த்து அரைத்து புளி சட்னி செய்யலாம்.
புதினா, கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு, உப்பு சிறிதளவு, சர்க்கரை அரை டீஸ்பூன் சேர்த்து அரைத்து, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து க்ரீன் சட்னி செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் கனமழை வரை!
ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் ஏற்படும் முகவாதம்: தப்பிக்க என்ன வழி?