எந்த வகை நொறுக்குத்தீனியாக இருந்தாலும் முடிந்தவரை அதிகம் வாங்கி ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப வாங்கிக்கொள்வது சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு ஏற்ற இந்த பாம்பே லக்டியை வீட்டிலேயே செய்து வைத்து ஃபிரிட்ஜில் வைக்காமல் தேவையானபோது சாப்பிடலாம்.
என்ன தேவை?
மைதா மாவு – அரை கப்
சர்க்கரைத்தூள் – கால் கப்
வனஸ்பதி – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
சமையல் சோடா, உப்பு – தலா ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் வனஸ்பதியுடன் சமையல் சோடாவைச் சேர்த்து நன்றாகத் தேய்க்கவும். பிறகு அதனுடன் சர்க்கரைத்தூள், மைதா மாவு சேர்த்துப் பிசறவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு, மாவைக் கெட்டியாகப் பிசையவும். பிறகு பிசைந்த மாவைச் சப்பாத்திகளாகத் தேய்த்து, சிறிய சதுரங்களாக வெட்டவும். எண்ணெயைக் காயவிட்டு, வெட்டிய துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
தண்ணீர் சேர்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். இல்லையென்றால், மாவு மிகவும் தளர்ந்துபோய் திரட்ட வராது. பொரித்து எடுக்கும்போது, பாம்பே லக்டி ‘வதக்வதக்’கென்றுதான் இருக்கும். ஆறியதும் மொறுமொறுப்பாக ஆகிவிடும்.
எடை குறைப்பு: தவிர்க்க வேண்டியவை… சாப்பிட வேண்டியவை!