2025 வரையில் குத்தகைக்கு விடப்பட்ட சென்னை உள்ளிட்ட தமிழக விமான நிலையங்கள்!

தமிழகம்

வாரணாசி, அமிர்தசரஸ், ஜோத்பூர், ராஞ்சி, சூரத், வதோதரா, போபால், ஹூப்ளி, இம்பால், பாட்னா, திருச்சி, கோவை, மதுரை, சென்னை, திருப்பதி, விஜயவாடா உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை 2022 முதல் 2025ஆம் ஆண்டு வரை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு விட்டுள்ளது.

விமான நிலையங்களின் மேலாண்மை மற்றும் பராமரிப்புப் பணிகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஈட்டும் வருவாயை, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி (டிஐஏஎல்), சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம், மும்பை (எம்ஐஏஎல்),

சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், லக்னோ (எல்ஐஏஎல்), சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் (ஏஐஏஎல்),

மங்களூரு சர்வதேச விமான நிலையம் (எம்ஏஐஏஎல்), ஜோத்பூர் சர்வதேச விமான நிலையம், (ஜேஐஏஎல்),

லோக்ப்ரியா கோபிநாத் போடோலோய் சர்வதேச விமான நிலையம், குவஹாத்தி (ஜிஐஏஎல்), திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் (டிஐஏஎல்) ஆகிய,

எட்டு விமான நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பொது – தனியார் பங்களிப்புடன் (பிபிபி) மேம்பாட்டு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

-ராஜ்

இன்று முதல் சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்!

கிச்சன் கீர்த்தனா : பனீர் சூப்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *