100 கி.மீ வேகத்தில் பயணம்… ஐஐடி மெட்ராஸில் ஹைப்பர் லூப் டிராக்!

Published On:

| By Minnambalam Login1

புல்லட் ரயில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். சென்னையில் இருந்து பெங்களூர், திருச்சி போன்ற நகரங்களுக்கு விமானத்தைவிட வேகமாக செல்ல வேண்டும் என்றால் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும்.

ஹைப்பர் லூப் பயணத்தில் இது சாத்தியமாகும். ஹைப்பர் லூப் குழாய்க்குள் காற்று இருக்காது. அதனால் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் உராய்வுக்கும் வாய்ப்பிருக்காது.

எனவே தான் அதில், ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடியும் என ஸ்பேஸ் எக்ஸ்சின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்தியாவிலும் ஹைப்பர் லூப் திட்டத்தை அமல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக, மெட்ராஸ் ஐஐடி தையூர் வளாகத்தில் ஹைப்பர் லூப் அதிவேக ரயில் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 410 மீட்டர் நீளத்துக்கு இந்த பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ஹைப்பர்லூப் டிராக் ஆகும். சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து , ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மிக விரைவாக பயணிப்பதற்கான ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். எல் அண்டு டி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது. ரயில்வேயும் இந்த திட்டத்துக்கு ரூ.8.50 கோடி வழங்கியது.

இந்த ஹைப்பர் லூப் டிராக்கில் நேற்று (டிசம்பர் 6) ரயில் இயக்கி பார்க்கப்பட்டது. அதில், 100 கி.மீ வேகத்துக்கு ரயில் சென்றது. விரைவில் வேகத்தை, 600 கி.மீ வேகத்துக்கு உயர்த்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், மெட்ரோ ரயில் போல நகரங்களில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

ஹைப்பர்லூப்பில் பார் என்று அழைக்கப்படும் ஒரு வாகனத்தில் 24 முதல் 28 பேர் பயணிக்கலாம். மணிக்கு அதிகபட்சமாக 1,100 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

போயிங் விமானத்தில் அதிகபட்ச வேகம் 850 கிலோ மீட்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சாலை வழியாக மும்பையில் இருந்து புனேவுக்கு செல்ல 3 மணி நேரம் பிடிக்கும்.

ஆனால், ஹைப்பர்லூப் அமைக்கப்பட்டால் 25 நிமிடத்தில் மும்பையில் இருந்து புனே நகருக்கு சென்று விடலாம். கடந்த 2013 ஆம் ஆண்டு முதன்முறையாக ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் உலக நாடுகளில் பரவலாக அமலுக்கு வந்தால், சாலை,ரயில், விமானம், கப்பல் போக்குவரத்துக்கு அடுத்தபடியாக 5வது போக்குவரத்து தலைமுறையாக கருதப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

தமிழ்நாட்டை உலுக்கும் போதைப் பொருள்: கடல் தாண்டிய நெட்வொர்க் முதல் போலீஸ் கறுப்பு ஆடுகள் வரை!

‘புஷ்பா 2’ பார்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… அல்லு அர்ஜூன் செய்த உதவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel