independence day police march

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி: காவல்துறை அணிவகுப்பு!

தமிழகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலையில்  இன்று (ஆகஸ்ட் 4) காவல்துறை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவின் போது சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றிவைக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு துறை சார்பில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும்.

அதன்படி சுதந்திர தின முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் என 7 படைப்பிரிவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 10 மற்றும் 13 ஆகிய தினங்களிலும் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அணிவகுப்பு ஒத்திகை காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

செல்வம்

பிரிக்ஸ் உச்சிமாநாடு: பிரதமா் மோடி பங்கேற்கிறார்!

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *