சுதந்திர தின விழாவை முன்னிட்டு காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை கோட்டை கொத்தளத்தில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அனைவரது வீடுகளிலும் இன்று முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெறும்.
இதற்கான அணிவகுப்பு ஒத்திகையானது ஆகஸ்ட் 4, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இறுதி ஒத்திகை நிகழ்ச்சியானது இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காமாண்டோ படை, குதிரை படை, பெண் பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்ட 7 படைப்பிரிவு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. சுதந்திர தின விழாவில் விருது வழங்குவதற்கான ஒத்திகையும் நடைபெற்றது. இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை: உறுதியளித்த ஸ்டாலின்
அன்பில் மகேஷ் ஹெல்த் ரிப்போர்ட்: மருத்துவமனை அறிக்கை!
Saved as a favorite, I really like your blog!
http://www.ecosmarte.com