Independence Day Medals for 15 Police

சுதந்திர தினம்: 15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம்!

தமிழகம்

சுதந்திர தினத்தன்று  15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு பதக்கம் வழங்குவார் என்று  தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  உரை நிகழ்த்துவார்.

முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறப்பு பதக்கங்கள் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.

அதன்படி, க. வெங்கடராமன்
கூடுதல் காவல் துறை இயக்குநர்,
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை

அஸ்ரா கர்க்
காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு),
சென்னை பெருநகர காவல்.

சு. ராஜேந்திரன்
காவல்துறை துணைத் தலைவர்,
குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை

ப.ஹீ. ஷாஜிதா,
காவல் கூடுதல் துணை ஆணையாளர்,
இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.

ஹா. கிருஷ்ணமூர்த்தி,
காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,
சென்னை

இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல் துறை அதிகாரிகள், 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

வே. அனில் குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம்.

கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம்.

ர. மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம்.

மா. அமுதா, காவல் ஆய்வாளர், பீளமேடு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம்.

ம. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.

இரா. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்

ஆ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.

அ.சித்திராதேவி, காவல் ஆய்வாளர், இணைய குற்றப்பிரிவு, திருப்பூர் மாவட்டம்.

ந. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.

மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, திருச்சிராப்பள்ளி.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நீட் தேர்வால என்ன சாதிக்க போறீங்க? – ஜெகதீஸ்வரனின் நண்பர் பேட்டி!

நீட் பயிற்சி நிறுவனங்களின் கைப்பாவையா ஆளுநர்?- சந்தேகம் எழுப்பும் முதல்வர்!

நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *