ரெட் அலர்ட் : புழல் ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு!

Published On:

| By Kalai

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பின் அளவு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வலுப்பெற்றிருப்பதால் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதி கனமழையை குறிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றிருப்பதால் இன்று(நவம்பர் 11) காலை முதலே சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து 1000 கனஅடியில் இருந்து 3000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதனால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரியில் 100 கனஅடியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கலை.ரா

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்!

5 மருந்துகளுக்குத் தடை : பதஞ்சலியின் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel