வெப்பம் அதிகரிப்பு காரணமாக வாகன ஓட்டிகளின் நலன் காக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வெப்பநிலையை அதிகரிக்கும் வகையில் மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது.
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகராட்சி சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலில் வாகன ஒட்டிகள் சிக்னலில் நிற்கும்போது, ஏற்படும் சிரமத்தை தவிர்க்க பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேவைப்படும் இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக இன்று (மே 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் உள்ள 8 சிக்னல்களில் முதற்கட்டமாக பசுமை பந்தல் காவல்துறையின் அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ளது.
வெயில் காரணமாக சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் சிரமமடைய கூடாது என்பதற்காக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, புதுச்சேரி மற்றும் மதுரை போன்ற இடங்களில் சாலைகளில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேவை ஏற்படும் பட்சத்தில் கூடுதல் இடங்களில் இந்த பசுமை பந்தல் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பசுமை பந்தல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றால், மழைக்காலங்களிலும் உதவும் வகையில் பந்தல்கள் அமைக்கப்படும்” என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!
ஜெயக்குமார் தோட்டத்தில் 4வது முறையாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு!