செம்பரம்பாக்கம்: நீர் திறப்பு அதிகரிப்பு!

Published On:

| By Monisha

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

இதனால் அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 400 கன தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தற்போது ஏரியின் நீர் மட்டம் 21 (முழு நீர் மட்டம் 24) அடியாக உள்ளது. ஆகையால் ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிக்கப்படும் என்று இன்று (நவம்பர் 5) காலை அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

குன்றத்தூர், நத்தம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டப்படி இன்று காலை 10 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

ஆர்.எஸ்.எஸ் பேரணியில் தீடீர் மாற்றம்!

என்னை கொல்ல திட்டமிட்டது இவர்கள்தான் : இம்ரான் கான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share