சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதாலும் 100 கன அடியாக திறக்கப்பட்ட நீரின் அளவு இன்று (டிசம்பர் 12) காலை 9 மணிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
ஏரியின் முழு கொள்ளளவு 24அடியாகும். காலை நிலவரப்படி 22அடி நீர் இருப்பு இருந்தது. அதோடு நீர்வரத்து தொடர்ந்து 2,046 கன அடியாக உள்ளது.
எனவே நீர் இருப்பு 23 அடிக்குள்ளாக இருக்க வேண்டும் என்பதால், மதியம் 12 மணி நிலவரப்படி 2000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நீர்வரத்தைப் பொறுத்துக் கூடுதலாகவும் நீர் திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பிரியா
புதுச்சேரியிலும் திமுக ஆட்சி: மு.க. ஸ்டாலின்