திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற நீராதாரங்களைக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.
அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் அணையின் நீராதாரங்களான கேரள மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 48.17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 50.20 அடியாக ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
சமீபத்தில் குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இந்தச் சூழலில் மழை பெய்து நீர்வரத்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைக்கு விநாடிக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
ரூபாய்மைய வர்த்தகத்தின் முக்கியத்துவம் என்ன? பகுதி 14
‘இந்தியா’வுக்காக ‘டீம் ஸ்பிரிட்டுடன்’ பாடுபடுகிறோம் : மு.க.ஸ்டாலின்