தமிழகத்தில் 2020-2021-ம் ஆண்டை விட 2021-2022-ம் ஆண்டில் நெல் உற்பத்தி மற்றும் நெற்பரப்பு அதிகரித்துள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழகத்தில், 2014- 15ஆம் ஆண்டு 1.20 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில், அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் 2021-22ஆம் ஆண்டில் 1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதனைப்போல, 2000-2001ஆம் ஆண்டில் 20.8 லட்சம் ஹெக்டேரில் நெல் பயரிடப்பட்டதே இதற்கு முன்பு சாதனையாக இருந்த நிலையில், 2021-22-ம் ஆண்டில் 22 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிடப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டில் 1 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2021-22ஆம் ஆண்டில் 1.2 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதனைப்போல, 2020-21-ம் ஆண்டில் 20 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்ட நிலையில், 2021-22 -ம் ஆண்டில் 22 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தமிழக அரசு நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது.
செல்வம்
வெளிநாடுகளில் கிராக்கி: நெல், கோதுமையை அதிகமாக பயிரிட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்!