சென்னையில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

Published On:

| By Monisha

Increase in house permit fee in Chennai

சென்னையில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டண உயர்வு இன்று (நவம்பர் 10) முதல் அமலுக்கு வந்தது. Increase in house permit fee in Chennai

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் குறிப்பாக சென்னையில் 100 சதுர மீட்டருக்கு (1,076 அடி) மேல் உள்ள இடத்தில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் (FSI) 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டினால் முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90 கட்டணமும், 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால், வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் தளப்பரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு இருந்தால் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90,

41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155,

101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410,

401 மீட்டருக்கு மேல் இருந்தால் 10 சதுர மீட்டருக்கு ரூ.1050 என அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த தொகையானது தற்போது 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.180,

41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.310,

101 முதல் 400 சதுர மீட்டர் வரை ரூ.820,

401 சதுர மீட்டருக்கு மேல் இருந்தால் ரூ.2,100 என அனுமதி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் மேற்கண்ட சதுர மீட்டருக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.210, ரூ.370, ரூ.920 மற்றும் ரூ.2,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. Increase in house permit fee in Chennai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

ICC WorldCup: அரையிறுதிக்கு செல்லப்போகும் கடைசி அணி எது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share