தமிழகத்தில் 30 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள எக்ஸெல் குழுமம் தொடர்புடைய மூன்று கார்ப்பரேட் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
ஆனால் இந்த சோதனை தொடர்பாக இன்னும் வருமானவரித் துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பிரியா
தாமதமாகும் மாவீரன்: தடுமாறும் சிவகார்த்திகேயன்
காவலருக்கு பாலியல் தொல்லை: நள்ளிரவில் கைது!
அதிமுக யாருக்கு? பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை!