வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத வருவாய் உள்ளிட்ட புகார் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் ஆதித்யா ராம், அம்பா லால், அசோக் ரெசிடன்சி ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அசோக் ரெசிடன்சிக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள அசோக் ரெசிடன்சி ஓட்டல் உரிமையாளர் வீடு மற்றும் போரூரில் உள்ள அசோக் ரெசிடன்சி நடசத்திர விடுதி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையின் முடிவில் வரி ஏய்ப்பு குறித்த விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
உலக காதலர் தினம்: அதிர்ச்சி கொடுக்கும் ரோஜா விலை!
பிரிட்டன் ராணிக்கு கொரோனா தொற்று உறுதி!