ஜி ஸ்கொயர் நிறுவனம்: 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

தமிழகம்

ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 4வது நாளாக இன்றும் (ஏப்ரல் 27) சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வருமானம் கடந்த 3 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளது.

எனினும் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டு காரணமாக வருமான வரித்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடகவில் பெங்களூரு, மைசூர், பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத் அலுவலகத்திலும் கடந்த 24ஆம் தேதி காலை முதல் சோதனை தொடங்கியது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் மூன்றாம் நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் முடிவில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சோதனை 4வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சென்னையில் அண்ணாநகர், ஆழ்வார்பேட்டை உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

சென்னை நீலாங்கரையில் உள்ள அந்நிறுவன இயக்குநர் பாலா மற்றும் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக்கின் அலுவலகத்திலும் இந்த சோதனை நீடிக்கிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

சூடான்: தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு!

இந்தப் பக்கம் எடப்பாடி- அந்தப் பக்கம் அண்ணாமலை: டெல்லியில் அமித் ஷா சொன்ன மெசேஜ்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *