பிரபல செருப்பு தொழிற்சாலையில் வருமான வரித்துறை திடீர் சோதனை!
ஆம்பூரிலுள்ள ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலுள்ள ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான ‘ஃபரிதா பிரைம் டேனரி பிரைவேட் லிமிடெட்’ என்ற தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, புதுச்சேரி ஆகிய 10க்கும் மேற்பட்ட ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் சுமார் 25க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஆம்பூர் பகுதியில் மிக பிரபலமான தொழிற்சாலையாக ஃபரிதா குழுமத்தின் தோல் மற்றும் காலணி தொழிற்சாலை 1976 ஆம் ஆண்டுமுதல் இயங்கி வருகிறது.
காலணி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த குழுமம், உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற தொழிலதிபர்!
ஃபரிடா குழுமத்தின் தலைவரான ரஃபீக் மக்கா கடந்த 2011ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
மேலும் அவர் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை சங்கங்களில் தலைவர் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்து வருகிறார்.
சமீக காலமாக தமிழகத்தில் அமைச்சர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் என வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பத்ம ஸ்ரீ விருது வாங்கிய தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களைக் குறி வைத்துள்ள வருமான வரித்துறை!