பிரபல ஜவுளிக்கடைகளில் வருமான வரி சோதனை!

Published On:

| By Kalai

கடலூர், விழுப்புரம், கரூரில் பிரபல ஜவுளிக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் – சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள அமைத்துள்ளது கே.வி.டெக்ஸ் ஆடையகம். 

பிரபலமான இந்த ஜவுளிக்கடையில் வருமான வரிதுறையினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் இருந்து 6 காரில் வந்த 15 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று விழுப்புரத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகம், வணிகவளாகத்தில் அடங்கியுள்ள மூன்று திரையரங்குகள், மகாலட்சுமி கல்வி நிறுவனம், மகாலட்சுமி ஜவுளி கடை, எம்.எல்.எஸ் மளிகை கடை,

இருசக்கர வாகன ஷோரூம், நகைக்கடை, மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் 40க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் காலை 10:30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் மெயின் ரோட்டில் சிவா டெக்ஸ் ஜவுளி கடை இயங்கி வருகிறது.

இக்கடையில் இன்று(நவம்பர் 2) காலை 3 வாடகை வாகனங்களில் வந்த வருமான வரி துறையினர் கடையின் கதவை பூட்டிவிட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கலை.ரா

ராமஜெயம் கொலை வழக்கு: நிர்மலா சீதாராமன் தலையீடு!

திமுக எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடு: திடீர் சர்வே!